சுயநலமில்லா அன்பின் மூன்றெழுத்து மந்திரம்-அப்பா.....

 அப்பா

சுயநலமில்லா அன்பின் மூன்றெழுத்து மந்திரம்-அப்பா.....


அம்மாவின் அன்பை விட
சிறந்த அன்பு உலகில்
இருக்கிறதென்றால்
அது அப்பாவின் அன்பு !

"மாறாத அன்பு
அம்மாவின் அன்பு" என்று
திருமணமாகதவன் சொன்னது !

அம்மா-அன்பை அன்பாக காட்டுவார்
அப்பா-அன்பை கண்டிப்பாக காட்டுவார்

பேரன் பேத்தியிடம் விளையாடும் போது
    அம்மாவை பாட்டியாக பார்க்கலாம்
பேரன் பேத்தியிடம் விளையாடும் போது
   அப்பாவை குழந்தையாக பார்க்கலாம்!

மகனிடம் தோற்பதை
   லட்சியமாய் கொண்டவர் !
மகன் தோற்றாலும்
   வெற்றிக்கு நம்பிக்கை கொடுப்பவர் !
மகன் நடைபயில
   மகன் வேகத்துக்கு நடப்பவர் !
மகன் ஒடுவதை
   ஒதுங்கி நின்று ரசிப்பவர் !

முதுமையில் மகன் கரம் பிடித்து
குழந்தைப் போல் நடப்பார்
அப்பா !

கொண்டுவந்தால் தான் தந்தை என்று
யார் பொய் சொன்னது
தான் கொண்டதை எல்லாம் கொடுப்பவர்
தந்தை உண்மை சொல்கிறது !

மகனின்
முதல் கதாநாயகன்
முதல் வில்லன்
அப்பா !

மகன் விழும் போது எழுவோம் என்று
நம்பிய முதல் மனிதர்
அப்பா !

"முடியாது" என்ற ஒற்றை வார்த்தையில்
கொடுத்த செயற்கை வலியால்
"முடியும்" என்ற நம்பிக்கையை
விதைத்தவர் அப்பா !

தந்தையிடம் வாக்குவாதம் பண்ணுவதில் பெண்பிள்ளைகளுக்கு இருக்கும் சுதந்திரம் ஆண்பிள்ளைகளுக்கு இல்லை....

நம்மை முன்னே நடக்க சொல்லி
பின்னால் மகிழ்வதும்,
நம்மை முன்னேற சொல்லி
பின்னின்று ஆனந்தப்படுவதும்,
இவரால் மட்டுமே முடியும் -அப்பா
-கருணாகரன்

ஒன்றுக்கும் உதவாதவன்
உருப்பிடதவன் ,தண்டசோறு
தடிமாடு என்று நம் முன்னால் அதிகம்
திட்டினாலும்
உடல் நல குறைபாடு ஏற்பட்டு
அயர்ந்து தூங்கும் பொழுது
நமக்கே தெரியாமல் நம்
கால்களை நீவி விட்டு நமக்காக சில
துளி கண்ணீர் விடுவார்
நம் தந்தை....

தோளில் சுமந்தாலும் ,

வார்த்தையால் வழி நடத்திய,

கண்ணரிந்த தெய்வம் நீ

வெளிப்படையாய் அன்பு காட்டி

நடிக்கும் உறவினர்கள் மத்தியில்

உள்நெஞ்சில் ஆழ் கடல் அன்பால்

என்னை வழி நடத்தியவன் நீ

என்றும் நீயே என் வழிகாட்டி

என்றும் நீயே என் தெய்வம் தந்தையே !!

ஐந்திரண்டு மாதம் சுமந்து
வலிகொண்டு பெற்றாள் அன்னை!!
ஆனால் இருபது  வருடமாய்

சுமக்காமல் சுமந்தாயே என்ன சொல்ல உன்னை...

அன்பை உள்ளே வைத்து கொண்டு
எதிரியை போல் தெரியும் ஒரே உறவு
-அப்பா

உலகில் விலை மதிப்பில்லாதது
அன்பு ஒன்றுதான்
ஏனோ  அது மட்டும் விலை இல்லாமல் கிடைப்பதால் தான்
அதை யாரும் உணரவில்லை..

கால தாமதம் ........

தாய், தந்தை
இந்த பொக்கிஷங்கள் உடனிருக்கும் பொது பணத்தை தேடி அலைந்தேன்,
பணம் வந்த வேளையிலே பொக்கிஷங்களை இழந்தேன்....
உண்மையை விட்டு பொய்யை தேடி வெகுதூரம்  அலைந்தேன்,
காலன் போட்ட கணக்கினாலே அத்தனையும்  இழந்தேன்,
எனது உறவுக்கு துவக்கம் தந்த உங்களை காண தவம் கிடக்கின்றேன்.....
கருணையோடு வாய்ப்பு கொடுங்கள் உங்கள் காலடி தொழுது கிடக்க
-கருணாகரன்.

தாயின் பாரம்
பத்து மாதம் தான்
நீயோ ஆயிள் வரை
சுமக்கும் தாயாகிறாய்
அறிவுக்கே அறிவுரை
கூறும் ஆசானே
ஆயிரம் வித்தகர்களை
உன் ஒற்றை வார்த்தையில் கண்டேன்
பார்வையால் சுட்டெரிக்கும் சூரியனாய்
பணிவால் உருகச் செய்யும் பனிமலையாய்
அன்பை மட்டுமே அடை மழையாய் பொழியும்
தந்தை எனும் விந்தையே
ஆண்டவனே அடைக்கலம் தேடும்
உன் அன்பு நெஞ்சம் தான்
எனக்குத் தஞ்சம்....

என்னை பத்து மாதம்
கருவறையில் சுமந்தவள்
என் தாய் என்றால்
என் தாயையும் சேர்த்து
என்னையும்
தன்  நெஞ்சிலே சுமந்தவர்
என் அப்பா....

பொறுமையே இல்லாதவன் கூட
ஒரு குழந்தைக்கு தகப்பனாக முடியும் ஆனால்
பொருப்புள்ளவன் தான் தந்தையாக முடியும்...

கடவுள் கொடுத்த வரம்
கிடைக்கவில்லை எனக்கு
கடவுளே கிடைத்தார் வரமாக-அப்பா

உன்னை வயிற்றில் சுமக்கும்
பாக்கியம் எனக்கு இல்லை
ஆகையால் நெஞ்சில் சுமந்து
தீர்த்துக்கொள்கிறேன்.....

ஏன் "அப்பா" என்னை விட்டு
சென்றாய் - கடவுளுக்கு அன்பு போதிக்கவா!

இல்லை நான் உண்மையாக அழ
வேண்டும் என்பதற்காகவா ?

உன் விருப்படியே படித்தேன்
பட்டமும் பெற்றேன்...,
பாராட்ட நீ இல்லையே-"அப்பா"

நல்லதொரு வேலையும் பெற்றேன்...,
நீ இல்லையே சந்தோசப்பட....

என்னிடம் பொய் கூறி விட்டாய்
காலம் முழுவதும் சுமப்பேன் என்று...,

உன்னை நினைக்கும் போது- ஆறுதல் சொல்ல
கண்ணீர் மட்டுமே எனக்கு...,

-ஆனால்

என்னை பற்றிய நினைவே இல்லாமல் -
உறங்கி கொண்டிருக்கிறாய் மண்ணுக்குள்ளே....

அம்மாவிடம் பாசத்தையும் அப்பாவிடம் நேசத்தையும் இன்றே உணர்த்துங்கள் சில நாளைகள் இல்லாமலும் போகலாம்...
நன்றி-SDPC

நானும் காட்டியதில்லை அவரும் காட்டியதில்லை எங்கள் பாசத்தை... இருந்தும் காட்டிக் கொடுத்த கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை

நன்றி-SDPC

சொல்லிக் கொடுத்ததில்லை திட்டியதும் இல்லை இல்லை என்றும் சொன்னதுமில்லை வேண்டாம் எனக் கூறியதும் இல்லை இருந்தும் ஏதோ ஒன்றினால் கட்டுப்படுத்தியது அப்பாவின் அன்பு.....
நன்றி-SDPC

அம்மா செல்லமா அப்பா செல்லமா என கேட்டபோதெல்லாம் பெருமையாகச் சொல்லி இருக்கிறேன் அம்மா செல்லமான அப்பா செல்லம் என இன்று அப்பா சென்ற பின்னர் நான் யார் செல்லம்..?

லேசாக என் கால் தடுமாறினாலும் பதறும் அப்பா இன்று நான் தடுமாறிய போது பதறாமல் இருக்கிறார் மீளா துயிலில்...

சிறுவயதில் என் கைப்பிடித்து நடைபயில சொல்லிக்கொடுத்த அப்பா என் கரம் பிடித்து நடந்த போது என்ன நினைத்திருப்பார்..?

கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..?

உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என...

அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது
நன்றி- SDPC

முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை...

நன்றி-SDPC

எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... நன்றி-SDPC

முதன் முதலாய் தன் குழந்தையை எப்படி தூக்குவதுஎனத் தெரியாமல் திணறி தூக்கக் கற்றுக் கொள்கையில் துவங்குகிறது தந்தை எனும் ‪#‎தாய்மை‬

மத்தாப்பு வாங்க
காசில்லை என்றிருந்தேன் ..
மகளே உன் சிரிப்பில் தீபாவளியும்
சிரிக்குதடி ..
‪‎ஏழை‬ அப்பாவின் கவிதை !!!

சுயநலமில்லா அன்பின் மூன்றெழுத்து மந்திரம்-அப்பா.....
இரா. கருணாகரன்    படித்ததில் பிடித்தது

Comments

Popular Posts