கவுண்டமணியின் காலத்தால் அழியாத வசனங்கள்

நகைச்சுவையின் மன்னர் என்று அழைக்கப்படும் நடிகர் கவுண்டமணி இன்று தனது 77 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இதனை முன்னிட்டு தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
25-1464160837-goundamanicomedies-600.jpg இந்த நேரத்தில் அவரின் நகைச்சுவை வசனங்களிலிருந்து ஒருசிலவற்றை இங்கே பார்க்கலாம். *'நீ யாருன்னு எனக்கு தெரியும் நான் யாருன்னு உனக்கு தெரியும் .. நாம ரெண்டு பேரு யாருன்னு இந்த ஊருக்கே தெரியும்...*'பத்த வச்சிட்டியே பரட்டை..'*'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..'*"ஏன்டா, எவன கேட்டாலும் மலேசியாவுல இருந்து காசு வருது, சிங்கப்பூர்ல இருந்து காசு வருதுன்னு சொல்றிங்க, அப்ப இந்தியால இருந்த காசெல்லாம் எங்கடா போச்சு?"*"டேய் தகப்பா.." *நாட்ல இந்த தொழிலதிபர் தொல்ல தாங்க முடியலடா...''*"ஆமா இவர் பெரிய கப்பல் வியாபாரி"*''மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். மோட்டர் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை. நமக்கு மனைவியும் அமையல மோட்டரும் அமையல''*"அய்யோ.. இப்போ நா எதையாவது வாங்கணுமே.. இந்த தெரு என்ன விலைன்னு கேளு"*"நான்லாம் அமெரிக்கால பொறக்க வேண்டியது, என் கெரகம் சைக்கிள் கட வச்சிருக்கேன்"*"காந்தக் கண்ணழகி உனக்கு மினிஸ்ட்ரில எடம் பாக்குறேன்"*"கோழி குருடா இருந்தாலும், கொழம்பு ருசியா இருக்கணும்டா" "இது உலக நடிப்புடா சாமி"*"க்ரீஸ் டப்பாவ எப்டி எட்டி ஒதச்ச?"*"பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?"*"என் அக்கா மகளே இந்து"*"உங்கக்காளுக்கு சூப்பு வக்கத் தெரியும்னே எனக்கு இன்னிக்குத்தாண்டா தெரியும்"*"நா இங்க ரொம்ப பிசி... இத பத்தி ஹோம் மினிஸ்டர்கிட்ட பேசுறேன்"

Comments