Skip to main content
ஆவி அறிவியல் : இன்று இரவு 'கொஞ்சம்' ஜாக்கிரதையாக இருங்கள்..!
ஆவி என்பது ஒருவர் இறந்த பின்பு அவரின் எதோ ஒரு வகையான எச்சம்/ஆசைக்காக அவர் வசித்த இடங்களில் அலைந்துகொண்டிருக்கும் ஒரு வகையான ஆத்மா என்றும், இறப்புக்காலம் வருவதற்கு முன்பாகவே மரணமடைந்தவர்கள் அவர்கள் இறப்புக் காலம் வரும் வரை பேயாக அலைந்து கொண்டிருப்பார்கள் என்றும் ஆவிகள் பற்றி பல வகையான நம்பிக்கைகளும், கதைகளும் உண்டு..! மறுபக்கம் - 'அறிவியல் தான் சர்வமும்' என்று நம்பும் கூட்டம் ஒன்று இருக்கிறது. எல்லாவற்றிற்கும் அறிவியல் ஆதாரம் தேடும் அந்த கூட்டம் ஆவிகள் சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டும் விட்டுவைக்குமா என்ன.? அவ்வாறாக ஆவிகள், பேய்கள், ஆத்மாக்கள் சார்ந்து நிகழ்த்தப்பெற்ற பல வகையான அறிவியல் ஆய்வுகளில் இருந்து அவைகளைப்பற்றி அறியபட்ட சில உண்மைகளை தான் கீழ் அவரும் ஸ்லைடர்களில் தொகுத்துளோம்..! ஆவிகளை அதிகம் நம்புபவர்கள் இதோடு வெளியேறிவிடுவது நல்லது, இல்லையெனில் இன்றைய இரவு கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துக்கொள்ளவும்..!
பொதுவான வழி :

கனவுகள், ஆழ் எண்ணங்கள், தூண்டுதல் இல்லாத நிலையில் வெளியாகும் எழுத்து, ஊசலாடுதல் மற்றும் உள்ளுணர்வுகள் - இது அனைத்துமே ஆவிகள் உங்களை தொடர்பு கொள்ள பயன்படுத்திக்கொள்ளும் பொதுவான வழிகளாகும்.
இவிபி :

அறிவியல் முறையில் - வைட் நாய்ஸ் (white noise ) மற்றும் இவிபி (EVP - electronic voice phenomena - மின்னணு குரல் நிகழ்வுகள் ) மூலம் ஆவிகளை தொடர்பு கொள்ள முடியும்..!
உயர் அதிர்வு நிலை :

பொதுவாக விலங்குகள் மற்றும் குழந்தைகளின் கண்களுக்கு ஆவிகள் புலப் படுகின்றன அதற்கு காரணம் விலங்குகள் மற்றும் குழந்தைகளிடம் உள்ள உயர் அதிர்வு நிலை (high vibration levels)..!
சமிக்ஞை :

எந்த அளவிற்கு உங்கள் தனிப்பட்ட ஆற்றல் (personal energy) அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு ஆவிகளால் உங்கள் சமிக்ஞைகளை கைப்பற்ற முடியும், உங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
பாதுகக்குமாம் :

பொதுவாக ஆவிகள் தாங்கள் இறந்த இடத்துடன் மிகவும் இணைப்பாக இருக்குமாம் அல்லது அடிக்கடி அந்த இடத்தை அடையுமாம், மேலும் அந்த இடத்தை பாதுகாக்கவும் செய்யுமாம்.
சம்பவங்கள் :

சிலர் தீய ஆவிகளால் தாக்கப்பட்ட சம்பவங்கள் என்பது உண்மை தான். யார் ஆவிகள் மீதி அதிக நம்பிக்கையும், அதிக பயமும் கொண்டுள்ளார்களோ அவர்களுக்கு தான் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடந்திருக்கிறது.
அட்டூழியம் :

சில இடங்களில் ஆவிகள் நடமாடுகிறது என்பதை நம்பவே முடியாத வண்ணம் சில நன்செய் ஆவிகள் அமைதியாக இருக்குமாம். மறுபக்கம் தீய ஆவிகள் அட்டூழியங்களை நிகழ்த்தி அங்கு வாழும் மக்களுக்கு தொந்தரவு மற்றும் அச்சுறுத்தல்களை வழங்குமாம்.
மண்டைக்குள் :

ஆம், ஆவிகளால் உங்கள் மண்டைக்குள் என்ன ஓடுகிறது என்பதை கண்டுப்பிடிக்க முடியுமாம், உங்கள் எண்ணங்களை ஆவிகளால் படிக்க முடியுமாம்.
அமானுட நடவடிக்கை :

மனிதனின் ஆறாவது அறிவானது ஒரு அமானுட நடவடிக்கை நடக்கிறது என்பதை மிகவும் வேகமாக உணர்ந்து கொள்ள முடியும்.
நள்ளிரவு 1 - 4 மணிக்கு :

எந்த விதமான வெளிப்படையான காரணமும் இல்லாமல் உங்களுக்கு நடுக்கம் ஏற்பட்டால் அல்லது புல்லரிப்பு ஏற்பட்டால் அல்லது நள்ளிரவு 1 - 4 மணிக்கு இடையே உங்களுக்கு அதீத தாகம் ஏற்பட்டால் அல்லது பழக்கமே இல்லாதபடியாக சிறுநீர் கழிக்க தோன்றினால் உங்களை சுற்றி என்னவோ நடக்கிறது என்பது உறுதி.
அச்சம் கொள்ளாத :

நன்செய் ஆவிகள் தங்களது இருப்பில் எந்தவிதமான பாதிப்பையும் உணராத தங்களை கண்டு அச்சம் கொள்ளாத மனிதர்களுடன் மட்டுமே தொடர்பு கொள்ளும்.
வாசம் :
தொடர்ந்து அறிவியல் விளக்கத்தின் கீழ் எங்கு உயர் அதிர்வு நிலை நிலவுகிறதோ அந்த இடங்களில் ஆவிகள் தொடர்ந்து வாசம் செய்யுமாம்..!
முடியும் :

ஆவிகள் மனிதர்களுடன், மனிதர்கள் ஆவிகளுடனும் நட்பு கொள்ள முடியுமாம்..!
http://ccsdigitalstudio.blogspot.in/
Comments
Post a Comment